இந்த வலைப்பதிவில் தேடுTAMIL RADIO

சனி, 20 மார்ச், 2010

கேரட் கீர்


கேரட்‍_ 5
பால் ‍_ 1 லிட்டெர்
சீனி_ 1 கப்
முந்திரி, பிஸ்தா_ த்லா 10
திராட்சை_ 20
நெய்_ 1 டீஸ்பூன்
ஏலக்காய்_5 [ பொடி செய்து கொள்ளவும்]
உப்பு.

கேரட்டைதண்ணீரில்லாமல் துடைத்து துருவிக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு
அதில் முந்திரி, பிஸ்தா,திராட்சையைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொண்டுஇத்துடன்
துருவிய கேரட்டையும் சேர்த்து வதக்கவும். குறைவான தணலில்கேரட் நெய்யுடன் கலக்கும் வரை
வதக்கவும்[ ஏறக்குறைய 5 நிமிடங்கள்]

இத்துடன் பாலையும் ஊற்றிக் கிளறவும். பாலின் அளவு கால் பங்கு ஆகும் வரை கொதிக்க வைக்கவும்.
பிறகுசர்க்கரை, உப்பு சிறிதளவு சேர்த்து 1 நிமிடம் கழித்து ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி விடவும்.

இதை சூடாகவும் பரிமாறலாம், குளிர வைத்தும் கொடுக்கலாம்[ என் சோய்ஸ் குளிர வைத்துக் கொடுப்பதுதான்]

2 கருத்துகள்:

  1. கேரட் கீர் செய்முறை விளக்கமே மிகவும் அருமையாய் பருகியதை போன்று ...

    அம்மாவிடம் சொல்லி முயற்சி செய்ய சொல்லகின்றேன். அம்மா நல்லா கேரட் அல்வா பண்ணுவாங்க. அதனால இது அவங்களுக்கு செய்வது இன்னும் எளிமையாய் இருக்கும்...

    (அம்மா உங்களை சிறுவயதில் தனியே விட்டுசென்றனதால் அந்த அன்பின் ஏக்கத்தை உங்களின் கவிதை வரிகளில் கண்ட சமயம் என் மனம் கலங்கியது)

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி தம்பி, உங்கள் வருகைக்கும் மற்றும் உங்களின் கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு