இந்த வலைப்பதிவில் தேடுTAMIL RADIO

சனி, 20 மார்ச், 2010

கோழி கறி மசாலா


கோழி இறைச்சி ஒன்றரை கிலோ
இஞ்சி விழுது 2 தேக்கரண்டி
பூண்டு விழுது 3 தேக்கரண்டி
மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி
எண்ணெய் தேவையான அளவு
சிறியவெங்காயம் 10 அரைத்தது ஒரு கப்
பெரிய வெங்காயம் 3 தோலுரித்து, நறுக்கிக் கொள்ளவும்.[லேசாக எண்ணெயிலிட்டு பொரித்து கொள்ள வேண்டும்]
தக்காளி பெரியது 3
மிளகாய்15[காய்ந்தது,ஊறவைத்துஅரைத்துக் கொள்ளவும்]
இளந்தேங்காய்ப்பூ அரை மூடி[ பொன்னிறமாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்]
கிராம்பு 2
பட்டை சிறுதுண்டு
கொத்தமல்லித்தழை சிறிது
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையான அளவு

கோழிக்கறியினைச் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு விழுதில் பாதிப் பாதி எடுத்துக் கொண்டு, மஞ்சள்தூள், மிளகாய்சாந்தில் 1 ஸ்பூன், உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டு கறிகளின் மீது பூசி சுமார் 30 நிமிடங்கள் ஊற விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கோழிக்கறியைப் போட்டு மிதமான தீயில் லேசாகப் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
கோழித்ததுண்டுகளை தனியே எடுத்து வைத்து, எண்ணெய்யைத் தனியே வடித்து வைக்கவும்.
தனியே எடுத்து வைத்த எண்ணெய்யை சூடாக்கி பட்டை, கிராம்பூ,கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.அரைத்து வைத்திருக்கும் மிளகாய் சாந்து கலவையைப் போட்டு எண்ணெய் மேலே மிதக்கும் வரை வதக்கவும்.
மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.தேவையான அளவு உப்புடன்,
மிகச் சிறிதாக வெட்டி வைத்திருக்கும் தக்காளியைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு, தீயைச் சற்று கூட்டி எண்ணெய் விடும் வரை வதக்கிக் கொள்ளவும்.
மசாலாவில் ஊற வைத்துப் பொரித்தெடுத்த கோழித்துண்டுகளைப் போட்டு தணலைக் குறைத்து நனகு கிளறவும்.
ஈரம் போய், மசாலா கறியில் படிந்து இறங்கியவுடன் பொரித்து வைத்திருக்கும்பெரிய வெங்காயத்தையும்,அரைத்து வைத்திருக்கும் தேங்காய்ப் பூவைத் தூளையும் போட்டுக் கிளறி இறக்கவும்.
கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் ப்ரிமாறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக