இந்த வலைப்பதிவில் தேடுTAMIL RADIO

சனி, 20 மார்ச், 2010

தக்காளி சட்னி


தக்காளி 2 பெரியது
காய்ந்த மிளகாய் 5 [ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.இத்துடன் சிறிய வெங்காயம் 3, பெரிய வெங்காயம் 1,1 பல் பூண்டு, சிறு துண்டு இஞ்சிஆகியவற்றையும் சேர்த்து அரைக்கவும்]
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை,கொத்துமல்லித் தழை சிறிது.
எண்ணெய் 1 டேபள் ஸ்பூன்

தக்காளியை மைக்ரோ அவனில் 3 நிமிடம் வைத்து எடுத்தால் அதன் மேல் தோல் மட்டும்
தனியாக எடுக்க வரும். [அவன் இல்லாதவர்கள் சுடு நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்தாலும்போதும்]
தக்காளியை கூழ் பதமாக குழைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியை சூடேற்றி 1 டேபள் ஸ்பூன் எண்ணெய் விட்டு
கடுகு தாளிப்பு, கறிவேப்பிலை போட்டு பொரிந்தவுடன் மிளகாய்
சாந்து கலவையைப் போட்டு தாளிக்கவும்.
சாந்து நன்கு எண்ணெயுடன் கலந்து பிரிந்து வரும் நேரம்
தக்காளிக் கூழைச் சேர்த்து அரை கப் தண்ணீரையும் சேர்த்து
குறைவான தணலில் கொதிக்க விடவும். 5 நிமிடம் கழித்து உப்பு சேர்த்து
கொத்து மல்லித் தழையையும் தூவி இறக்கிவிடலாம்.
[இதில் இன்னும் ருசியாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு
தனி டிப்ஸ்; 1 டேபள் ஸ்பூன் இளந்தேங்காய்ப்பூ,1 டேபள் ஸ்பூன் வேர்க்கடலை
இவையிரண்டையும் லேசாக வறுத்து நன்கு மைய அரைத்து
தக்காளி சட்னியை இறக்கு முன் போட்டு கிளறி இறக்கவும்.]
முன்னெச்சரிக்கை; வீட்டிலுள்ளோருக்கு தோசையோ,இட்லியோ, சப்பாத்தியோ
எதுவாக இருந்தாலும் தொட்டுக் கொள்ள இந்த தக்காளி சட்னியுடன்
சேர்த்து சாப்பிடக் கொடுக்கும் பொழுது கொஞ்சம் அதிகமாகவே செய்து
வைக்காவிடில், சமைப்பவர்களுக்கு சாப்பிடக் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது.]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக