இந்த வலைப்பதிவில் தேடுTAMIL RADIO

புதன், 21 செப்டம்பர், 2011

ப்ரோக்கோளி சமைக்கும் முறை





கோளிஃப்ள்வரைப்போலவே பிரிக்க வேண்டும். பிரிக்க முடியாத பெரிய துண்டுகளை வேண்டுமானால் சிறிதாக வெட்டிக் கொள்ளலாம்.சிறிது நேரம் உப்பு நீரில் போட்டு வைத்திருந்து புழுக்கள் இருந்தால் வெளியான பிறகு ஆவியில் மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு வேக விட்டு எடுக்கவும்.பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு 2 சிறிய வெங்காயம்,2பல் பூண்டு ,சிறு துண்டு இஞ்சி இம்மூன்றையும் இடித்துப் போட்டு[உறைப்புக்கு வேண்டுமானால் 4 சிவப்பு மிளகாயையும் சேர்க்கலாம்] நனகு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து உப்பும் இட்டு கடைசியாக அரைவேக்காடாக வெந்திருக்கும் ப்ரோக்கோளியையும் போட்டு கிளறி இறக்கி சூடு ஆறுவதற்குள் சாப்பிட வேண்டும். இது நம் இந்தியர்களுக்கு ஒத்துப் போகும் ரெசிபி. சாப்பிட்டு பார்த்து சொல்லுங்களேன். எப்படியிருந்தது என்று.

சனி, 20 மார்ச், 2010

கேரட் கீர்


கேரட்‍_ 5
பால் ‍_ 1 லிட்டெர்
சீனி_ 1 கப்
முந்திரி, பிஸ்தா_ த்லா 10
திராட்சை_ 20
நெய்_ 1 டீஸ்பூன்
ஏலக்காய்_5 [ பொடி செய்து கொள்ளவும்]
உப்பு.

கேரட்டைதண்ணீரில்லாமல் துடைத்து துருவிக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு
அதில் முந்திரி, பிஸ்தா,திராட்சையைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொண்டுஇத்துடன்
துருவிய கேரட்டையும் சேர்த்து வதக்கவும். குறைவான தணலில்கேரட் நெய்யுடன் கலக்கும் வரை
வதக்கவும்[ ஏறக்குறைய 5 நிமிடங்கள்]

இத்துடன் பாலையும் ஊற்றிக் கிளறவும். பாலின் அளவு கால் பங்கு ஆகும் வரை கொதிக்க வைக்கவும்.
பிறகுசர்க்கரை, உப்பு சிறிதளவு சேர்த்து 1 நிமிடம் கழித்து ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி விடவும்.

இதை சூடாகவும் பரிமாறலாம், குளிர வைத்தும் கொடுக்கலாம்[ என் சோய்ஸ் குளிர வைத்துக் கொடுப்பதுதான்]

கோழி கறி மசாலா


கோழி இறைச்சி ஒன்றரை கிலோ
இஞ்சி விழுது 2 தேக்கரண்டி
பூண்டு விழுது 3 தேக்கரண்டி
மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி
எண்ணெய் தேவையான அளவு
சிறியவெங்காயம் 10 அரைத்தது ஒரு கப்
பெரிய வெங்காயம் 3 தோலுரித்து, நறுக்கிக் கொள்ளவும்.[லேசாக எண்ணெயிலிட்டு பொரித்து கொள்ள வேண்டும்]
தக்காளி பெரியது 3
மிளகாய்15[காய்ந்தது,ஊறவைத்துஅரைத்துக் கொள்ளவும்]
இளந்தேங்காய்ப்பூ அரை மூடி[ பொன்னிறமாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்]
கிராம்பு 2
பட்டை சிறுதுண்டு
கொத்தமல்லித்தழை சிறிது
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையான அளவு

கோழிக்கறியினைச் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு விழுதில் பாதிப் பாதி எடுத்துக் கொண்டு, மஞ்சள்தூள், மிளகாய்சாந்தில் 1 ஸ்பூன், உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டு கறிகளின் மீது பூசி சுமார் 30 நிமிடங்கள் ஊற விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கோழிக்கறியைப் போட்டு மிதமான தீயில் லேசாகப் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
கோழித்ததுண்டுகளை தனியே எடுத்து வைத்து, எண்ணெய்யைத் தனியே வடித்து வைக்கவும்.
தனியே எடுத்து வைத்த எண்ணெய்யை சூடாக்கி பட்டை, கிராம்பூ,கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.அரைத்து வைத்திருக்கும் மிளகாய் சாந்து கலவையைப் போட்டு எண்ணெய் மேலே மிதக்கும் வரை வதக்கவும்.
மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.தேவையான அளவு உப்புடன்,
மிகச் சிறிதாக வெட்டி வைத்திருக்கும் தக்காளியைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு, தீயைச் சற்று கூட்டி எண்ணெய் விடும் வரை வதக்கிக் கொள்ளவும்.
மசாலாவில் ஊற வைத்துப் பொரித்தெடுத்த கோழித்துண்டுகளைப் போட்டு தணலைக் குறைத்து நனகு கிளறவும்.
ஈரம் போய், மசாலா கறியில் படிந்து இறங்கியவுடன் பொரித்து வைத்திருக்கும்பெரிய வெங்காயத்தையும்,அரைத்து வைத்திருக்கும் தேங்காய்ப் பூவைத் தூளையும் போட்டுக் கிளறி இறக்கவும்.
கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் ப்ரிமாறலாம்.

தக்காளி சட்னி


தக்காளி 2 பெரியது
காய்ந்த மிளகாய் 5 [ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.இத்துடன் சிறிய வெங்காயம் 3, பெரிய வெங்காயம் 1,1 பல் பூண்டு, சிறு துண்டு இஞ்சிஆகியவற்றையும் சேர்த்து அரைக்கவும்]
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை,கொத்துமல்லித் தழை சிறிது.
எண்ணெய் 1 டேபள் ஸ்பூன்

தக்காளியை மைக்ரோ அவனில் 3 நிமிடம் வைத்து எடுத்தால் அதன் மேல் தோல் மட்டும்
தனியாக எடுக்க வரும். [அவன் இல்லாதவர்கள் சுடு நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்தாலும்போதும்]
தக்காளியை கூழ் பதமாக குழைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியை சூடேற்றி 1 டேபள் ஸ்பூன் எண்ணெய் விட்டு
கடுகு தாளிப்பு, கறிவேப்பிலை போட்டு பொரிந்தவுடன் மிளகாய்
சாந்து கலவையைப் போட்டு தாளிக்கவும்.
சாந்து நன்கு எண்ணெயுடன் கலந்து பிரிந்து வரும் நேரம்
தக்காளிக் கூழைச் சேர்த்து அரை கப் தண்ணீரையும் சேர்த்து
குறைவான தணலில் கொதிக்க விடவும். 5 நிமிடம் கழித்து உப்பு சேர்த்து
கொத்து மல்லித் தழையையும் தூவி இறக்கிவிடலாம்.
[இதில் இன்னும் ருசியாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு
தனி டிப்ஸ்; 1 டேபள் ஸ்பூன் இளந்தேங்காய்ப்பூ,1 டேபள் ஸ்பூன் வேர்க்கடலை
இவையிரண்டையும் லேசாக வறுத்து நன்கு மைய அரைத்து
தக்காளி சட்னியை இறக்கு முன் போட்டு கிளறி இறக்கவும்.]
முன்னெச்சரிக்கை; வீட்டிலுள்ளோருக்கு தோசையோ,இட்லியோ, சப்பாத்தியோ
எதுவாக இருந்தாலும் தொட்டுக் கொள்ள இந்த தக்காளி சட்னியுடன்
சேர்த்து சாப்பிடக் கொடுக்கும் பொழுது கொஞ்சம் அதிகமாகவே செய்து
வைக்காவிடில், சமைப்பவர்களுக்கு சாப்பிடக் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது.]